38 வருசத்துக்கு முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. "அங்க இருந்த பதுங்கு குழி'ல பாத்தப்போ.." இத்தனை வருஷம் கழிச்சு தெரஞ்ச 'விஷயம்'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 16, 2022 11:36 AM

நாடு முழுவதும் நேற்று (15.08.2022) 76 வது சுதந்திர தின விழா, மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருந்தது. இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றி, தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போராட்ட வீரர்களுக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

remains of soldier who missed before 38 years found

Also Read | "நான்கூட டாக்டர் தான்".. மேட்ரிமோனியில் வலைவிரித்த இளைஞர்.. நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

இதனிடையே, 38 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இந்திய ராணுவ வீரர் குறித்த தகவல், பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம்,ஹல்த்வானி என்னும் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஹார்போல். கடந்த 1971 ஆம் ஆண்டு, ராணுவ வீரராக பனிபுரிந்து வந்த சந்திரசேகர், 1984 ஆம் ஆண்டின் போது பாகிஸ்தானை எதிர்த்து போராடுவதற்காக "ஆபரேஷன் மேக்தூத்" என்ற பெயரில் உள்ள குழுவில் ஒருவராக இருந்துள்ளார். இதற்காக, உலகின் மிக உயரமான போர்க்களம் என அறியப்படும் சியாச்சன் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், சந்திரசேகர் உட்பட 5 பேர், பனிச்சரிவில் சிக்கி மாயமானார்கள். கடந்த 38 ஆண்டுகளாக இவர்கள் பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது சந்திரசேகர் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. அவரின் உடல் பாகங்கள், சியாச்சன் பகுதியில் உள்ள பழைய பதுங்கு குழியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் பாகங்களுடன் கிடந்த அடையாள பேட்ஜ் மூலம், சந்திரசேகர் தான் என்பதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதுகுறித்து சந்திரசேகரின் மனைவியான சாந்தி தேவி பேசுகையில், "அவர் காணாமல் போய் 38 வருடங்கள் ஆகி விட்டது. தற்போது மெதுவாக அனைத்து காயங்களும் மீண்டும் திறக்கிறது. எனக்கு 25 வயது இருக்கும் போது அவர் காணாமல் போனார். 1975 ஆம் ஆண்டு நாங்கள் திருமணம் செய்தோம். அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அவர் காணாமல் போன போது, என் மூத்த மகளுக்கு நான்கு வயது. இரண்டாவது மகளுக்கு ஒன்றரை வயது.

remains of soldier who missed before 38 years found

இறந்தவர்களுக்கு செய்யும் கடமையை நாங்கள் ஏற்கனவே அவருக்காக செய்து விட்டோம். எனது வாழ்க்கையை, பின்னர் மகள்களை வளர்ப்பதற்காகவே அர்ப்பணித்தேன். பல தடைகள் மற்றும் சவால்கள் இருந்த போதிலும், ஒரு தியாகியின் துணிச்சலான மனைவியாகவும், பெருமையான தாயாகவும் அவர்களை சிறப்பாக வளர்த்தேன்" என சாந்தி தேவி கூறி உள்ளார்.

தற்போது 62 வயதாகும் சாந்தி தேவி, கணவர் சந்திரசேகர் காணாமல் போன பிறகு, வேறு திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஏகிற வைத்த இணைய பில்?.. வாலிபர் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு போய் அரசு கொடுத்த 20 கோடி ரூபாய் நிதி உதவி!! பின்னணி என்ன??

Tags : #SOLDIER #ராணுவ வீரர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Remains of soldier who missed before 38 years found | India News.