"சரணடையணுமா.. அப்படி ஓரமா போயி..".. ரஷ்ய ராணுவத்தை சிங்கிளாக எதிர்த்த உக்ரைன் வீரர்.. அரசு கொடுத்த கவுரவம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய ராணுவத்திடம் சரணடைய மறுத்ததுடன் கடுமையான சொற்களால் அவர்களை விளாசிய உக்ரைன் வீரர் படைக்கு திரும்பியிருக்கிறார். அவருக்கு மெடல் அளித்து கவுரவப்படுத்தியிருக்கிறது உக்ரைன் அரசு.

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம்.. வெளிவந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பு..!
போர்
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.
சுற்றிவளைத்த ராணுவம்
உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஸ்நேக் தீவு. கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் 13 உக்ரைன் வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காலை ரஷ்யாவின் இரண்டு போர் கப்பல்கள் இந்த தீவுப் பகுதியை சுற்றி வளைத்துள்ளன.
அப்போது, தீவில் இருந்த வீரர்களிடம் பேசிய ரஷ்ய ராணுவ வீரர்கள்," உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவும். இல்லையேல் குண்டு வீசி உங்களை கொல்ல வேண்டி இருக்கும்" என மிரட்டல் விடுத்தனர்.
பதில்
இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தினரின் தகவலை அங்கிருந்த 13 வீரர்களில் ஒருவர் தங்களது கேப்டனிடம் கூறி இருக்கிறார். " ரஷ்ய வீரர்கள் சுற்றி வளைத்துவிட்டார்கள், இப்போது என்ன செய்ய வேண்டும்?" என உக்ரைன் வீரர் தனது கேப்டனிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த கேப்டன்,“சரணடைய முடியாது” என ரஷ்ய ராணுவத்தினரிடம் சொல்லுமாறு கூறி இருக்கிறார். அப்படியே சொல்லட்டுமா? என உக்ரைன் வீரர் கேட்க, கேப்டன் ஆம் என பதில் அளித்திருக்கிறார்.
உடனடியாக ரஷ்ய ராணுவ கப்பலை தொடர்புகொண்ட உக்ரைன் வீரர்,"ரஷ்ய இராணுவமே, சரணடைய முடியாது” எனக் கூறி இருக்கிறார். சற்று நேரத்திற்குள் தீவை வெடிகுண்டால் சிதறடித்திருக்கிறது ரஷ்ய படை. அந்தத் தீவில் இருந்த 13 வீரர்களும் இதில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
சிறைபிடிப்பு
இந்நிலையில், ரஷ்ய ராணுவம் அவர்களை சிறைபிடித்தது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் அந்த வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து ரஷ்ய ராணுவத்திடம் 'சரணடைய முடியாது' எனக் கூறிய உக்ரைன் வீரரான ரோமன் ஹிரிபோவ் விருது அளிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போடு சக்க.. குறைஞ்ச விலையில் டாப்லெட்.. Xiaomi நிறுவனத்தின் வேறமாரி அறிவிப்பு..!

மற்ற செய்திகள்
