'இரண்டு குழந்தைக்கு மேல'... 'பெத்துக்க கூடாது'...'அப்படி நடந்துச்சுனா'?... என்ன இப்படி சொல்லிட்டாரு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 27, 2019 11:19 AM

இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது,என்ற சட்டம் கொண்டு வரபட வேண்டும் என,பாபா ராம்தேவ் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

Ramdev demanded a complete ban on cow-slaughter

நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருவதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.மேலும் பேசிய அவர் 'ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகளை ஒருவர் பெற்று கொண்டால், மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என சட்டம் கொண்டு வரவேண்டும், என தெரிவித்துள்ளார். அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறுவதை நாம் தடுக்க வேண்டுமென்றால்,நிச்சயம் நாம் இதனை கடைபிடித்தாக வேண்டும்.

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தற்போது வாக்காளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் எதுவும் சென்று சேருவதில்லை.இது போன்ற சட்டம் வரும்போது மக்கள் நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள மாட்டார்கள்.மேலும் இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.மாடு படுகொலைக்கு தடை விதிக்க வேண்டும். அப்போது தான் பசு பாதுகாவலர்களுக்கும்,மாட்டினை கடத்த நினைப்பவர்களுக்கும் நிகழும் பிரச்சனைகளுக்கு,முற்று புள்ளி வைக்க முடியும்.

இறைச்சி சாப்பிட ஆசை பட்டால் அதற்கு நிறைய இறைச்சி இருக்கிறது.அதனை சாப்பிட வேண்டும்.அதைப் போன்று மது பானத்திற்கு தடை விதிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது தடை செய்யப்பட்டிருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் அது சாத்தியமில்லை என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

Tags : #RAMDEV #POPULATION CONTROL #VOTE #COW-SLAUGHTER