ஐடி ஜாம்பவான்கள் கையில தான் 'இது எல்லாமே' இருக்கு!.. இந்த 'நிலைமை'லயும் இந்தியாவுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுடன், இந்திய ராணுவம் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை ஏற்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

TCS, HCL Tech, Tech Mahindra, Infosys மற்றும் Wipro போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், இணையப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்துடன் கைக்கோர்க்க இருக்கின்றன.
Cyber technology என்று சொல்லப்படும் இணைய தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா முன்னிலையில் இருக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் Artificial Intelligence(AL), Machine Learning(ML), blockchain மற்றும் quantum computing ஆகியவற்றின் துணை கொண்டு இணையப்பாதுக்காப்பினை மேம்படுத்த முடியும்.
Internet-Of-Things(IoT) முதலிய தொழில்நுட்பக் கருவிகளால், தேச பாதுகாப்புத் தேவையான ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 101 ராணுவ பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தார். ஐபிஎம் (IBM) நிறுவனம் அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தேசப்பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வரும் நிலையில், இந்தியாவின் பிற ஐடி ஜாம்பவான்களைப் பயன்படுத்தி இந்திய ராணுவத்தின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் சூழல் தற்போது உருவாகி இருப்பதாக தொழிநுட்ப-பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்ற செய்திகள்
