'அதிகரிக்கும் கொரோனா'... 'இத மட்டும் செஞ்சா 5000 ரூபாய் ஊக்கத்தொகை'... ஜெகன்மோகன் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் இதனால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவைக் கண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இத்தொடர்ச்சியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையடுத்து கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குக் கடந்த 3 நாட்களாகத் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,349 பேர் பலியாகியுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.