'பொருட்கள் வச்ச இடத்துல இருக்கு...' 'அது எப்படி நிழல் மட்டும் காணாம போகும்...? - வியக்க வைக்கும் நிகழ்வின் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 18, 2021 11:59 AM

அடிக்கின்ற வெயிலில் நிழல் பூமியில் விழாத சிறப்பான நாள் ஏப்ரல் மாதத்தில் நடந்தேறியுள்ளது.

In Thanjavur, the average day without shade was 12.12 noon

நம்முடைய வளிமண்டலத்தை சூரியனை சுற்றிதான் பூமி உள்ளிட்ட 9 கோள்களும், சிறு சிறு விண்மீன்களும் கொண்டு பால்வழி அண்டாமாக இருக்கிறது. சூரியனை மையமாக கொண்டு பூமி சுழழுவதால் சூரிய ஒளி பூமி மீது பட்டு செங்குத்தான பொருட்களின் நிழல் பூமியில் விழுவதுண்டு.

சூரிய ஒளியினால் ஏற்படும் இந்த நிழல் ஆண்டிற்கு இருமுறை மட்டும் பூமி மீது விழுவதில்லை, இதற்கு காரணமும் விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது.

பொதுவாக இந்த நிழல் நாளானது கடக ரேகைக்கும், மரக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் வருமாம். அதாவது, சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட நாளில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளை விட்டு விலகிச் செல்லாமல் நேராக அதன் மீதே விழுகிறது. இந்த 2021ஆம் ஆண்டை பொறுத்தவரை, நிழல் இல்லா நாள் ஏப்ரல் 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான ஏதாவது ஒருநாளில் வரும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி இந்த மாதம் ஏப்ரல் 10-ம் தேதி கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலும், 11-ம் தேதி திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலும் நிழல் இல்லா நாள் வந்தது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 17ம் தேதி தஞ்சையில் செங்குத்தான பொருட்களில் நிழல் பூமியில் விழவில்லை.

தஞ்சாவூரில் பொருத்தமட்டில், சராசரியாக நண்பகல் 12.12 மணியளவில் நிழலில்லா நாள் ஏற்பட்டது. இதனை தஞ்சையின் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி வளாகத்தில், மேசை மீது ஒரு சில செங்குத்தான பொருட்கள் வைக்கப்பட்டன  அப்போது சரியாக 12.12 மணியில் அந்த பொருட்களின் மேசையின் நிழல் வட திசையிலோ அல்லது தென் திசையிலோ விழவில்லை.

மேலும் இந்த நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. In Thanjavur, the average day without shade was 12.12 noon | Tamil Nadu News.