"வயசானவரு, ஹெல்ப் கேக்க கூப்பிட்டாருனு நினைச்சோம்"... "ஆனா அவரோட மனசு இருக்கே"... முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 15, 2020 05:05 PM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு ஊரடங்கை மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக அரசுகள் மற்றும் பல நல்ல உள்ளம் படைத்த மக்கள் மற்றவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

Old man from Kolkata winning hearts in Social Media

இந்நிலையில், 82 வயதான சுபாஷ் சந்திரா என்பவர் கொல்கத்தா பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஒய்வு பெற்ற பேராசிரியரான இவர், தனது வீட்டின் அருகில் பணியில் இருந்த போலீசாரை அழைத்துள்ளார். வயதானவர் என்பதால் ஏதேனும் உதவி செய்ய அழைத்திருப்பார் என போலீசார் கருதிய நிலையில் அந்த முதியவர், கையில் பத்தாயிரத்திற்கான காசோலை ஒன்றை நிரப்பி வைத்துக் கொண்டு இதனை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்ப முடியுமா என கேட்டுள்ளார்.

அது மட்டுமில்லாது, ஆன்லைனில் எனக்கு பணம் அனுப்ப தெரியாது என்பதால் உங்களை அழைத்தேன். உங்களை சிரமப்படுத்தியதற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட அது நெட்டிசன்களிடையே வைரலானது.

தனது முதுமை காலத்திலும் தன்னால் முடியும் உதவியை செய்ய நினைத்த சுபாஷ் சந்திராவின் பெருன்பான்மையை அறிந்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.