"'சுதந்திர தினம்' அன்னைக்கி 'இந்த' விஷயத்த எல்லாம் ஃபாலோ பண்ணுங்க"... வழிமுறைகளை வெளியிட்ட 'மத்திய' அரசு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா தொற்று கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொடிய தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
![national ministry issue guidelines for independence day celebrati national ministry issue guidelines for independence day celebrati](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/national-ministry-issue-guidelines-for-independence-day-celebrati.jpg)
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நாட்டின் 74 வது சுதந்திர தின விழா கொண்டாட வேண்டிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 'ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடித்து கொண்டப்பட வேண்டியுள்ளது' என குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள சில முக்கிய வழிமுறைகள்:
நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துகள் என விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
அதே போல விழாவில் கலந்து கொள்பவர்கள், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் நாடெங்கிலும் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரை விழாவிற்கு அழைத்து கௌரவிக்கலாம். அதே போல கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சிலரையும் அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)