மகன் MLA ..ஆனாலும் தூய்மை பணியாளராக தொடரும் தாய்.. குவியும் பாராட்டுகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகன் MLA ஆன பிறகும் தான் மேற்கொண்டுவரும் தூய்மை பணியை தொடர்ந்து செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தாய் ஒருவர். இது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
வேறலெவல்! சென்னை டூ பெங்களூருக்கு 25 நிமிஷத்துல போலாம்.. எப்படி?.. அசத்திய தமிழக மாணவர்கள்..
பஞ்சாப் மாநில தேர்தல்
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று முதன்முறை ஆட்சியை பிடித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்தது.
இந்தக் கட்சியின் சார்பில் பாதவுர் தொகுதியில் போட்டியிட்டவர் லாப் சிங் உகோக். இவரது தாய்
பல்தேவ் கவுர். இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
வெற்றி
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான சரண்ஜித் சிங் சன்னி பாதவுர் தொகுதியில் போட்டியிட்டார். இதனிடையே இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கிய உகோக் 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார்.
கடமையை தொடருவேன்
தேர்தலில் தனது மகன் வெற்றிபெற்றாலும் தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பல்தேவ் கவுர். இதுகுறித்து அவர் பேசுகையில்,“எனது மகன் தேர்தலில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரை எதிர்த்து போட்டியிட்டாலும் என் மகன் வெற்றி பெறுவார் என நம்பினோம். துடைப்பம் (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கம் ஆகும். நாங்கள் எப்போதும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். என்னுடைய மகன் MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பள்ளியில் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.
மக்கள் நலன்
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சன்னியை தேர்தலில் தோற்க்கடித்த உகோக்கின் தந்தை தர்ஷன் சிங் கூலிவேலை செய்து வருகிறார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனது மகன் பணியாற்றுவார் எனத் தெரிவித்த தர்ஷன் சிங்," எனது மகனை மக்கள் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து உள்ளனர். மக்கள் நலனுக்காக எனது மகன் உழைக்கவேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் முன்பைப்போலவே எங்களது வாழ்க்கையை நடத்துவோம்" என்றார்.
மகன் MLA ஆன பிறகும் தான் செய்துவரும் தூய்மை பணியை தொடர்ந்து செய்ய இருப்பதாக பல்தேவ் கவுர் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் திளைக்க வைத்திருக்கிறது.
அதிர்ச்சி! ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம்.. Russia – Ukrine War-ன் தாக்கமா? எங்க தெரியுமா?