'எல்லாம் நல்லா போகுதுன்னு நெனச்சா'... 'திடீரென அதிகரிக்கும் கொரோனா'... கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 23, 2021 04:04 PM

கொரோனா பரவல் ஆரம்பித்து ஒரு வருடம் முடியப் போகும் நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Maharashtra records sudden jump in Covid-19 cases, triggers panic

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாகக் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களைப் பொறுத்தவரைத் தினசரி பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது.

Maharashtra records sudden jump in Covid-19 cases, triggers panic

கேரளாவைப் பொறுத்தவரைக் கடந்த 4 வாரங்களாக, வார சராசரி கோவிட் பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்தது. மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தினசரி கொரோனாவினால் பாதிப்படையும் மாநிலங்களில் 'ஆர்டி-பிசிஆர்' பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. 

அங்குப் பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவிலிருந்தது. அதுபோலவே பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து 9ம் தேதி வரை சிகிச்சை பெறும் க கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 43,701 முதல் 34,640 ஆகக் குறைந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது.

Maharashtra records sudden jump in Covid-19 cases, triggers panic

இதையடுத்து  கடந்த 10 நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு சராசரி 4610 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த 11 நாட்களில் மட்டும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக 59,937 ஆக உயர்ந்துள்ளது. அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களில் பரவி வரும் கரோனா வைரஸின் தன்மை குறித்து ஆய்வு நடத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வைரஸ்களின் மாதிரிகள் புனே வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maharashtra records sudden jump in Covid-19 cases, triggers panic | India News.