'லாரிய ஹைஜாக் செய்த திருடர்கள்...' 'பெட்டிக்குள்ள இருந்தத மொத்தமா ஆட்டைய போட நினைச்சிருக்காங்க, ஆனால்...' - சினிமாவை மிஞ்சிய சிசிடிவி வச்சு மிரட்டல் சேஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்திலிருந்து சென்ற சுமார் 12 கோடி மதிப்புடைய செல்போன்களை மர்ம கும்பல் ஒன்று லாரியோடு கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை இரவு தலைநகர் சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டிருந்த லாரியில், சுமார் 12 கோடி மதிப்புடைய 15,000 செல்போன்கள் இருந்துள்ளன.
இந்நிலையில் செல்போன் சென்ற லாரியை கைப்பற்றிய மர்ம கும்பல் லாரி ஓட்டுனரை அடித்து உதைத்துள்ளனர். அதையடுத்து லாரியை கைப்பற்றிய கொள்ளையர்கள் லாரியுடன் தப்பி ஓடியுள்ளனர்.
மேலும் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் சென்ற நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் நகரி அருகே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் கடத்தப்பட்ட லாரி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபட்ட திருடர்கள் லாரியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அதையடுத்து லாரியை மீட்ட போலீசார், லாரியில் இருந்த சரக்குகளை வேறொரு வாகனத்தில் மாற்றியுள்ளனர்.
மொத்தம் ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்கள் லாரியில் உள்ளதா என பார்த்தபோது வெறும் சுமார் 6 கோடி மதிப்புடைய செல்போன்களே இருந்துள்ளன.
கொள்ளையர்கள் ரூ .6 கோடி மதிப்புள்ள 7,500 மொபைல் போன்கள் அடங்கிய எட்டு பெட்டிகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.