அன்னைக்கு மட்டும் ‘சச்சின்’-க்கு ஏதாவது ஆகியிருந்துச்சு.. ஃபேன்ஸ் என் ‘சோலியை’ முடிச்சிருப்பாங்க.. அக்தரை பயந்து நடுங்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் டெண்டுல்கருடனான சந்திப்பின்போது நடந்த சுவாரஸ்மான சம்பவத்தை ஷோயப் அக்தர் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடனான பழைய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து Sportskeeda ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுக்கு பிறகு என்னை அதிகம் நேசிக்கும் நாடு இந்தியாதான். இந்திய சுற்றுப்பயணத்தில் நிறைய நல்ல நினைவுகள் உள்ளது. 2007-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது கிரிக்கெட் வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது.
அந்த சமயம் எப்போதும் விளையாடுவதுபோல சச்சின் டெண்டுல்கரை தூக்கினேன். ஆனால் எதிர்பாராதவிதமாக கை நழுவி அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விட்டதோ என நான் பயந்து நடுங்கிவிட்டேன். இனிமேல் இந்தியா வர விசா கிடைக்காது, இந்திய ரசிகர்கள் என்னை நாடு திரும்ப விடமாட்டார்கள், என்னை உயிருடன் எரித்து விட போகின்றனர் என பயந்துவிட்டேன்’ என சோயப் அக்தர் கூறியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இரு நாட்டு வீரர்களும் நிகழ்ச்சி ஒன்றிற்காக கூடியிருந்தனர். அப்போதுதான் சச்சினை சோயப் அக்தர் விளையாட்டாக தூக்கி கீழே தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.