அந்த படகு 'பாகிஸ்தான்'ல இருந்து வந்துருக்கு...! 'சந்தேகமடைந்த அதிகாரிகள்...' - சோதனையிட்டபோது காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தின் கடற்படை போலீசார் பாகிஸ்தானில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 77 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத்தின் கடலோர காவல் படை மற்றும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படை இணைந்து கடலோர பகுதிகளில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு அனுமதியில்லாமல் குஜராத் கடற்பகுதிக்குள் வருவதைப் கடலோர பாதுகாப்புப்படையினர் கண்டறிந்துள்ளனர்.
அந்த படகை சுற்றி வளைத்த கடலோர பாதுாப்பு படையினர், தீவிரவாத தடுப்புப்படையினர் எப்போதும் போல ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த படகில் 6 பாகிஸ்தானை சேர்ந்த நபர்கள் இருந்ததோடு, அந்த படகு பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும் முதற்கட்ட கூறியுள்ளனர்.
அதோடு, அந்த படகில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான ஹெராயின் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததோடு அதிகாரிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த அதிரடி சம்பவம் குறித்து குஜராத் பாதுகாப்புத்துறை தன் அதிகார ட்விட்டரில் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், 'குஜராத் கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாத தடுப்புப்படை இணைந்து நடத்திய சோதனையில், அல் ஹூசைனி என்ற படகு சிக்கியது. அதில் 6 பாகிஸ்தானியர்கள் இருந்தனர்.
அதோடு, அந்தப் படகில் சுமார் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.400 கோடியாகும். தற்போது இந்தப் படகு ஜகு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் இதற்கு முன்பும் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பாகிஸ்தான் படகில் கடத்தி ரூ.300 கோடி மதிப்புள்ள 33 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்டு இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.