கொரோனாவால் 'இறந்தவர்களின்' பட்டியலில்...' புதிதாக' சேர்க்கப்பட்ட 444 மரணங்கள்... காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் புதிதாக 444 மரணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் விடுபட்ட மரணங்கள் குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் ஜுன் 10-ம் தேதி வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 ஆக கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆதலால் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 மரணங்கள் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த 444 மரணங்களில் ஒரு சிலர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3144 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
