தோழிகளுடன் படகு பயணம்.. திடீரென காணாமல் போன நடிகை.. "சரியா 300 மீட்டர் தொலைவுல.." தெரிய வந்த திடுக்கிடும் சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Mar 01, 2022 03:15 PM

திடீரென காணாமல் போன தாய்லாந்து நடிகை பற்றி, இரண்டு நாட்கள் கழித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

thai actress tangmo nida body found after 2 days of missing

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி.. கோபத்தில் டிராக்டர் எடுத்துக்கிட்டு காதலன் செஞ்ச காரியம்..!

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை நிடா டாங்மோ பட்சராவீர்போங். இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாது, நிறைய நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தன்னுடைய தோழிகளில் சிலருடன் ஒரு படகை வாடகைக்கு எடுத்து விட்டு, பயணம் செய்துள்ளார். அப்போது, தோங்பூரி என்னும் பாலத்தில் இருந்து, நோதாபுரி என்னும் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தேடுதல் வேட்டை

இதனிடையே, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, இரவுக்கு பின்னர், திடீரென நிடா காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகையின் தோழிகள், செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர்.தொடர்ந்து, நடிகையின் சகோதரருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கவே, அவர் போலீசில் இது பற்றி புகார் ஒன்றை அளித்துள்ளார். உடனடியாக, டாவ் பிரயா என்னும் ஆற்றின் பகுதியில் தேடுதல் வேட்டையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

thai actress tangmo nida body found after 2 days of missing

மீட்புப் பணி

நிடாவின் உடலை பல இடங்களில் தேடி வந்த நிலையில், சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு, நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பிபுல்கோங்கிராம் பையர் பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் ஒரு சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறை வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து, மீட்கப்பட்ட உடலை கரைக்கு கொண்டு வந்த சேர்த்ததையடுத்து, நிடாவின் சகோதரர், சகோதரியின் நகை மற்றும் உடைகளை வைத்து அடையாளம் காட்டினார். பிறகு, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்ட்டது. நிடா உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், படகில் அவருடன் இருந்த தோழிகளுடன், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நடந்தது என்ன?

சம்பவத்தன்று, இரவு சுமார் 10:30 மணிக்கு மேல், நிடா டோங்மோ கழிவறைக்கு சென்றார் என்றும், அப்போது கழிவறை சரியாக வேலை செய்யாத காரணத்தினால், படகின் பின்புறம் சென்று, இயறக்கை கடனை முடிக்கச் சென்றார் என்றும் தோழி ஒருவர் குறிப்பிட்டார். மேலும், நீண்ட நேரமாகியும் , நிடா திரும்பி வராததால் அங்கு சென்று தேடி பார்த்தோம். அவரை அங்கே இல்லாததால், சந்தேகத்தின் பெயரில், நிடாவின் சகோதரரை அழைத்து விஷயத்தை தெரிவித்தோம் என்றும் கூறியுள்ளார்.

thai actress tangmo nida body found after 2 days of missing

மர்மம் இருக்கு

அதே போல, படகு பயணத்தின் போது, நிடா மற்றும் அவரது தோழிகள், பாதுகாப்பு கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பயணம் செய்த படகின் உரிமம், காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, கவனக்குறைவின் பெயரில் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி , படகு உரிமையாளர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தன்னுடைய மகளின் மறைவில், மர்மம் இருப்பதாகவும் நிடா டாங்மோவின் தாயார் தெரிவித்துள்ளார்.

வேதனையில் ரசிகர்கள்

நிடாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அடுத்த கட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நிடா டாங்மோ மறைவு, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Breaking: மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் 26 வயது மகன் உயிரிழப்பு! அதிர்ச்சியில் தொழில்நுட்ப உலகம்..!

Tags : #THAI ACTRESS #TANGMO NIDA #படகு பயணம் #தாய்லாந்து #நடிகை நிடா டாங்மோ பட்சராவீர்போங் #மீட்புப் பணி

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thai actress tangmo nida body found after 2 days of missing | World News.