'இ பாஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்'... உள்துறை செயலர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்திற்கு இடையேயான போக்குவரத்து மற்றும் மாநிலத்திற்குளேயான போக்குவரத்திற்கு மாநில அரசுகள் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்குத் தடை வேண்டாம். அதே நேரத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைப்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திணிப்பது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கருதப்படும் என்றும், எனவே கட்டுப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றவும், உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம், "அன்லாக் 3" வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது இ-பாஸ் நடைமுறை அவசியமற்றது எனக் குறிப்பிட்டிருந்தது.

மற்ற செய்திகள்
