“யார் என்ன மறந்தாலும் நீ நியாபகம் வெச்சிருந்தா போதும்!” .. ‘சுஷாந்த் போட்ட ட்வீட்!’.. ‘வாசல் கதவையே’ ஏக்கமாக பார்க்கும் ‘செல்ல நாயின் சோகம்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்திய திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து தற்போது வரை அவருடைய ரசிகர்கள் மீளவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் சுஷாந்த் சிங் ஆசையாக ஃபட்ஜ் என்று பெயரிட்டு வளர்த்து வந்த கருப்பு லேப்ரடார் நாய் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆம் சுஷாந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது நாயும் மிகவும் சோகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. ஃபட்ஜ், சுஷாந்தை எண்ணி எண்ணி சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் அதன் உடல் நிலை மிகவும் மோசமாகி உயிர் இழந்து விட்டது என்றும் கூட சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் ஃபட்ஜ் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை சுஷாந்தின் உறவினர்கள் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஃபட்ஜ் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
2018-ஆம் ஆண்டு சுஷாந்த் சிங் தனது நாயுடன் விளையாடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “யார் என்னை மறந்தாலும் எனக்கு கவலை இல்லை. நீ என்னை நினைவில் வைத்திருந்தால் போதும்!” என்று அந்த கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் மரணமடைந்த நிலையில் அவரது இறுதிச்சடங்குகள் ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. அவரது அஸ்தியை கங்கையில் ஜூன் 18-ஆம் தேதி அவருடைய குடும்பத்தினர் கரைத்தனர். இந்த நிலையில்தான் சிங்கின் தந்தை கேகே சிங்குடன் ஃபட்ஜ் இருந்து வருவதாகவும் எனினும் சுஷாந்த் சிங்கின் வருகையை எதிர்நோக்கி, கதவு திறக்கப்படும் போதெல்லாம் வாசலையே பார்த்து சுஷாந்தின் வருகைக்காக ஏங்குவதாகவும் அவருடைய உறவினர் மல்லிகா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
