“சுஷாந்த் தற்கொலையே பண்ணல... இது கொலை!”.. “உலகப் புகழ்பெற்ற மும்பை போலீஸ் இத இன்னும் கண்டுபிடிக்கல!”.. இப்படி கொதிச்சது யார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் வழக்கு பற்றி மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் நாராயண் ரானே பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதுபற்றி பேசிய அவர், “சுஷாந்த் சிங்கின் இந்த வழக்கு முக்கியமானது. ஆனால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்புகிறார்கள். உண்மையில் சுஷாந்த்தின் தற்கொலை, தற்கொலையே அல்ல. இது மரணம். அவர் இறந்து 50 நாட்கள் சென்ற பின்பும் உலகப் புகழ் பெற்ற மும்பை போலீசாரால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சுஷாந்த் வீட்டில்தான் ரியா தங்கியிருந்திருக்கிறார். ஆனால் ரியா தன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறார். அவர் திடீர் என்று தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அவர் எங்கு போனார் என்று போலீசாருக்கு தெரியவில்லை. சுஷாந்தை 20 நாட்களுக்கும் மேலாக மிரட்டியது யார்?. எதற்காக தினமும் தன் சிம் கார்டை அவர் மாற்றியிருக்கிறார் என்பது குறித்து ஏன் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை?. யாரையோ காப்பாற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறார்களா?
சுஷாந்த் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு சூரஜ் பஞ்சோலியின் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களை போலீசார் ஏன் விசாரிக்கவில்லை? யார் இந்த தினோ மோரியா?. சுஷாந்தின் வீட்டிற்கு அருகில் இருக்கும் அவரது வீட்டிற்கு பல அமைச்சர்கள் வந்து செல்கிறார்கள். பார்ட்டி நடந்த நாள் அனைவரும் தியோ வீட்டில் இருந்து சுஷாந்த் வீட்டிற்கு போயிருக்கிறார்கள். இதேபோல் சுஷாந்தின் முன்னாள் மேனேஜரான தியா சாலியன் தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். திஷா பிரேத பரிசோதனை அறிக்கை பற்றி கேள்விபட்டேன். ஆனாலும் போலீசார் ஏன் இது தொடர்பாக அமைதியாக இருக்கிறார்கள்?” என்றார்.

மற்ற செய்திகள்
