“ஆக்சுவலா சுஷாந்த்தின் எதிர்கால ப்ளான் இதுதான்! ஆனா ரியா அத தடுத்து, அவர அச்சுறுத்தி”... சுஷாந்த் தந்தை தெரிவித்த ‘பரபரப்பு’ தகவல்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரபர்த்தி மீது, சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்ததை அடுத்து அவரது தற்கொலை பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நடிகை ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரியா மீது உள்பட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா மத்திய மண்டல ஐ.ஜி சஞ்சய் சிங் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை சுஷாந்த் பற்றிய பல்வேறு மர்ம முடிச்சுகளை கட்டவிழ்த்துக்கொண்டே வருகிறார். அதன்படி, சுஷாந்த் சிங் கூர்க் பகுதியில் விவசாய பண்ணை அமைத்து செட்டில் ஆக விரும்பியதாகவும், ஆனால் ரியா அதை தடுத்ததுடன் அவரை அச்சுறுத்தி, அவரை தற்கொலை வரை கொண்டுசென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரியாவுக்கு நிறைய பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளதால் இவ்வழக்கு இன்னும் பரபரப்பாகி வருகிறது.

மற்ற செய்திகள்
