'கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு யூஸ் பண்றவங்களுக்கு...' 'புதிய விதிமுறைகள்...' - நாளை முதல் அமல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி சர்வதேச பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பாதுகாப்புக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பாக நடக்கும் மோசடிகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் தாமாக கோரினால் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இது பாதுகாப்பு ஏற்பாட்டை அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்றால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கவும் பிஓஎஸ் முனையில் ஷாப்பிங் செய்ய தேவைப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை அனுமதிக்க வேண்டாம் என்பது இதன் அர்த்தம் ஆகும்.
வெளிநாட்டு பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத அட்டை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் இதற்கான விருப்பத்தைத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அட்டையுடன் உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அல்லது வெளிநாட்டு பரிவர்த்தனைகள் வேண்டுமா என்பதை நாளைமுதல் வாடிக்கையாளர்களே தீர்மானிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் இதை எந்த நேரத்திலும் தீர்மானிக்க முடியும், மேலும் இனி எது தனக்கு தேவையான சேவை, எந்த சேவை தேவையில்லை என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அட்டை மோசடி பரவலாக நடைபெறுவதால், அதை தடுக்கும் விதமாக தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேவை நிறுத்தித் தொடங்கலாம். அதேபோல் பிஓஎஸ் அல்லது ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்பவில்லை என்றால் ஆன்லைன் பரிவர்த்தனை மட்டும் ஆன் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.