இந்திய வீரர்களை தாக்க ‘முன்கூட்டியே’ கொண்டு வரப்பட்ட ‘முள்கம்பி’.. வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் ‘சதித்திட்டம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாலடாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை சீனா முன்னமே திட்டமிட்டு நடத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறையிடம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலின் போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால், இரு நாட்டு எல்லையை ஒட்டிய 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு துப்பாக்கியை பயன்படுத்தக்கூடாது என்கிற விதி வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனால் சீன ராணுவத்தினர் முன்கூட்டியே கூரான முள்கம்பிகளை உடைய இரும்புக்கம்பிகளை தங்களுடன் எடுத்து வந்துள்ளனர். இதுபோன்ற முள்கம்பிகளால் தாக்கியதால்தான் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 18, 19 தேதிகளில் இதேபோன்ற கம்பிகளை பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ராணுவத்தினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
The nail-studded rods — captured by Indian soldiers from the Galwan Valley encounter site — with which Chinese soldiers attacked an Indian Army patrol and killed 20 Indian soldiers.
Such barbarism must be condemned. This is thuggery, not soldiering pic.twitter.com/nFcNpyPHCQ
— Ajai Shukla (@ajaishukla) June 18, 2020
சீனா ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் ஷாங் சூய்லி கூறுகையில், ‘கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் சீன ராணுவ உயிரிழப்பு குறித்து விரிவாக எதுவும் பேச முடியாது’ என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
