இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. சைக்கிள் டயரை செக் பண்ணிய அதிகாரிகளுக்கு காத்திருந்த ‘ஷாக்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாசைக்கிள் டயரில் பணம் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச எல்லையில் உள்ள கோகுல் நகர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதிகாரிக்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதில், சைக்கிளில் மறைத்து வங்கதேச டாக்கா பணத்தை கடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நபர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார். உடனே அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். ஆனால், அந்த நபரிடம் பணம் ஏதும் சிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சைக்கிள் டயரை சோதனை செய்தனர். அப்போது அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வங்கதேச பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் 9 லட்சத்துக்கு 97 ஆயிரம் வங்கதேச டாக்கா பணம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைக்கிள் டயரில் மறைந்து பணம் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
