சாக்கடைக்குள் இறங்கிய ஆம் ஆத்மி கவுன்சிலர்... முதல்வன் பட ஸ்டைலில் பாலாபிஷேகம்- வைரல் PIC!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
“இது சும்மா வெறும் ப்ரேக் தான்.. அடுத்த வருசம் பாருங்க”.. கோலி குறித்து அஸ்வின் சொன்ன சீக்ரெட்..!
ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவர் அரவிந்த கெஜ்ரிவாலும் சமீப ஆண்டுகளாக அரசியல் தளத்தில் தாக்கத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது அந்த கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் நடக்கும் தேர்தல்களில் அந்த கட்சி போட்டியிட்டு வருகிறது.
டெல்லியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி...
கடந்த 2017-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி 70 தொகுதிகளில், 67 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பாண்மையோடு ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஆட்சியைத் தக்கவைத்தது. இப்போது வட இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு போட்டி போடும் கட்சியாக ஆம் ஆத்மி வளர்ந்து வருகிறது.
பஞ்சாப்பில் முதல்முறை..
சமீபகாலமாக வளர்ச்சியில் இருக்கும் கட்சியாக ஆம் ஆத்மி உருவாகி வருகிறது. டெல்லியில் ஆட்சியைத் தக்கவைத்த ஆம் ஆத்மி இப்போது அடுத்த கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்
விரைவில் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கு இப்போதே பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் டெல்லியின் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப் உல் ஹசன் என்பவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லியின் சாஸ்திரி நகர் பகுதியில் குப்பைகள் கிடந்த கழிவு நீர் தொட்டிக்குள் இவர் இறங்கி சுத்தம் செய்ய அதை அக்கட்சியின் தொண்டர் ஒருவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும் அவர் சுத்தம் செய்து முடித்தபின்னர், அவர் மேல் தொண்டர்கள் பாலை ஊற்றி கழுவியுள்ளனர். முதல்வன் படத்தில் சாக்கடைக்குள் விழுந்து வரும் அர்ஜுனை அடையாளம் கண்டுகொள்ளும் மக்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்வர். அந்த காட்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் தற்போது டெல்லியில் நடந்துள்ள சம்பவம் முதல்வன் காட்சியை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.