4 வாரத்திற்கு யாரும் ஆபீஸ் வர வேண்டாம்.. உலகளவில் அனைத்து அலுவலகங்களையும் மூடுவதாக அறிவித்த 'பிரபல ஐடி' நிறுவனம்

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Jan 13, 2022 11:13 AM

விப்ரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் முதல் தங்கள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை அலுவலகத்திற்கு வர வைத்து பணிகள் நடந்து வருகிறது.

Wipro it company announces closure of all offices worldwide

அதுமட்டுமல்லாமல், அக்டோபரில் அந்நிறுவனம் ஜனவரி 2022 முதல் ஊழியர்களை அலுவலகம் வர வைக்கும் முயற்சியை விரைவுப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது. எனினும், தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் அந்த முயற்சியை விப்ரோ நிறுவனம் கைவிட்டுள்ளது.

Wipro it company announces closure of all offices worldwide

நான்கு வாரங்கள் அலுவலகங்கள் மூடல்:

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐடி நிறுவனமான விப்ரோ, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு வாரங்களுக்கு உலகளவில் தங்கள் அலுவலகங்களை மூட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Wipro it company announces closure of all offices worldwide

மேலும், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், ஊழியர்களை அலுவலகம் வர வைக்கும் முயற்சியை திரும்ப பெறவதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தியரி டெலாபோர்ட் கூறியுள்ளார். விப்ரோ நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் செப்டம்பர் மாதம் முதல், வாரம் இருமுறை அலுவலகத்திற்கு வருகின்றனர். மொத்தத்தில், 3 சதவீத பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிகின்றனர்.

Wipro it company announces closure of all offices worldwide

இரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 50 சதவீதம் :

விப்ரோ ஊழியர்களில் 50 சதவீதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர் மற்றும் 85 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர். 2022-ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ரூ.2,970 கோடி நிகர லாபத்தைப் பெற்றுள்ளது, முந்தைய காலாண்டில் ரூ.2,931 கோடியாக இருந்தது, இப்படி ஆண்டுக்கு ஆண்டு அந்நிறுவனத்தின் நிகர லாபம் சீராக இருந்து வருகிறது.

Wipro it company announces closure of all offices worldwide

2022-ஆம் ஆண்டுக்கான வருவாய் மட்டும் ரூ. 20,432.3 கோடியாக வந்தது, இது முந்தைய காலாண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.19,667 கோடியை விட அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விப்ரோ ரூ.15,670 கோடி வருவாய் ஈட்டியதால், இந்த எண்கள் ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீத வளர்ச்சியைக் குறிக்கின்றன.

Tags : #WIPRO #WORLDWIDE #CLOSE #OFFICE #விப்ரோ #அலுவலகங்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wipro it company announces closure of all offices worldwide | Business News.