‘ஆபீஸ் வந்து எட்டிக்கூட பார்க்கல’... ‘அடுத்தடுத்த அதிரடியால், 5 மாதங்களில்’... ‘அசுர வளர்ச்சி காட்டிய இந்திய ஐடி நிறுவனத்தின் சிஇஓ’...!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்உயர் அதிகாரிகளை குறைத்து, அதிரடி நடவடிக்கையால், விப்ரோ நிறுவன தலைமை செயல் அதிகாரியாக தியரி டெலபோர்ட் நியமிக்கப்பட்ட 5 மாதங்களில், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளன.

கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், பல ஆலோசனைகளுக்குப் பின்னர் பாரீஸைச் சேர்ந்த 53 வயது, தியரி டெலபோர்ட் (Thierry Delaporte) என்பவர், அந்நிறுவனத்தின தலைமை நிர்வாக அதிகாரியாக நிர்வாகக் குழுவால் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இவரின் வருகைக்குப் பின் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் அளவீடுகள் கொரோனா பாதிப்பையும் தாண்டி வளர்ச்சியை அடைந்தது. இதன் எதிரொலியாகக் கடந்த 5 மாதத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 70 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட Thierry Delaporte 5 மாத காலத்தில் ஒரு முறை கூடப் பெங்களூரில் இருக்கும் விப்ரோ தலைமை அலுவலகத்திற்கு ஒரு முறை கூட வரவில்லை. அனைத்து பணிகளையும் நிர்வாகக் கூட்டங்களையும் பாரிஸில் உள்ள அவரது வீட்டில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள், உலகம் முழுவதிலும் இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பேசி வருகிறார்.
தலைமையிலான விப்ரோ நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாக அதிகாரிகள் 25 பேரில் இருந்து வெறும் 4 பேர் கொண்டு குழுவாக மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. மேலும் புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்காக நிறுவனங்களைக் கைப்பற்றும் முடுக்கிவிட்டார். அதன்பிறகு அவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையில் இருந்து பல திட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதன் வாயிலாக இந்தியாவின் 4வது பெரிய ஐடி நிறுவனமாக இருக்கும் விப்ரோ நிறுவனப் பங்குகள் இவரது நியமனத்திற்குப் பின் சுமார் 70 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரொனாவால் பாதிப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்தில் விப்ரோ நிறுவனத்தின் இந்த வளர்ச்சி இந்நிறுவனத்தின் நிர்வாகத்தையும் தாண்டி முதலீட்டாளர்களும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியாக உள்ளது.
தியரி டெலபோர்ட், ஜூலை 6 ஆம் தேதி தலைவராக நியமிக்கப்பட்ட போது விப்ரோ நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 222.65 ரூபாய். இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு மதிப்பு 358.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மற்ற செய்திகள்
