"இந்த வருஷத்துக்குள்ள '24,000' பேர புதுசா வேலைக்கு எடுக்குறோம்"... 'இந்தியா'வை டார்கெட் பண்ணி... மாஸ்டர் 'பிளான்' போட்ட முன்னணி ஐ.டி 'நிறுவனம்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தும், பலரை பணிநீக்கம் செய்தும் வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிலுள்ள முன்னணி ஐ.டி நிறுவனமான கேப்ஜெமினி இந்தியாவிலுள்ள தங்களின் 50 ஆயிரம் ஊழியர்களின் திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள கேப்ஜெமினி ஐ.டி நிறுவனங்களில் 2,70,000 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் 1,25,000 க்கு அதிகமானோர் இந்தியாவில் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் மேற்கொள்ளும் வணிக தேவைகளை தங்களின் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
'வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும், வருங்காலத்தில் கற்றலுக்கான வளர்ச்சி பாதையை உருவாக்கவும் தேவையான திறன்களை ஊழியர்களுக்கு வழங்க முயற்சி செய்கிறோம்' என இந்தியாவின் கேப்ஜெமினி நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார். அதே போல, இந்தியாவில் கேப்ஜெமினி நிறுவனத்தின் திறன்களை இந்தாண்டு விரிவுபடுத்தவும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தாண்டின் முதல் பாதியில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் திறனை மேம்படுத்தியுள்ளது. நெட் (Net); ஜாவா(Java); ஃபுல் ஸ்டேக் (Full Stack); செயற்கை நுண்ணறிவு (AI), ஆகிய இடங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தாண்டு இறுதிக்குள் 24,000 ஊழியர்களை இந்தியாவில் மட்டும் புதிதாக பணிக்கு அமர்த்த கேப்ஜெமினி நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் பாதியில் மட்டும் 9,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது. ஊழியர்களின் திறனை மேம்படுத்த வேண்டி, புதிதாக கற்றல் தளம் ஒன்றையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல, புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கும் 2,3 மாதங்கள் பயிற்சி அளித்து அவர்களது திறனை மேம்படுத்த முடிவு செய்துள்ளது

மற்ற செய்திகள்
