ஐ.டி ஊழியர்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'!.. OUTSOURCING அதிகமானதால்... டாப் 4 நிறுவனங்களின் 'அதிரடி' திட்டம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஐ.டி. துறையில் முன்னணியில் இருக்கும் 4 ஜாம்பவான்கள் சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகரித்து வரும் அவுட்சோர்சிங் (outsourcing) விளைவாக க்ளைன்ட் ப்ராஜெக்ட்ஸை விரைந்து முடிக்க வேண்டி, ஏற்கெனவே இருக்கும் டீம்களுக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில், மெகா வேலைவாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் முடங்கியிருந்த புதிய வேலைவாய்ப்புகளை மீண்டும் தொடங்கி, 2020ம் ஆண்டு வெளியேறிய பட்டதாரிகளுக்கு, ஐ.டி பெரு நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை வழங்கத் தயாராகிவிட்டன.
அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான Tata Consultancy Services (TCS), 40,000 புதிய அதிகாரிகளை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், freshers-க்கும் பணி ஆணைகளை வழங்கி வருகிறது.
அடுத்ததாக, பெங்களூரை மையமாகக் கொண்ட Infosys நிறுவனம், இந்த ஆண்டு 20,000 பேருக்கு வேலைவாய்ப்பைகளை வழங்க இருக்கிறது.
அதைத் தொடர்ந்து, HCL நிறுவனம் புதிதாக 15,000 பேருக்கு வேலைவழங்க காத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, சிறிய ஐ.டி. நிறுவனங்களும் Work From Home(WFH) முறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக Hiring இல்லாததால், வேலைப்பழு அதிகமானதன் விளைவாக பெரும்பாலான நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அள்ளிக்குவிக்கத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பேசிய காக்னிசன்ட் (CTS) தலைமை செயல் அதிகாரி ப்ரையன், இந்த ஆண்டு 15,000 freshers-ஐ சிடிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்த இருப்பதாக தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
