'தாத்தா ஆரம்பித்த 'ஏர் இந்தியா'... 'இப்போ பேரன் கைக்கு போக போகுதா'?... அதிரடியாக களமிறங்கிய 'டாடா'!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

ஏர் இந்தியா (Air India) நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அதைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அதற்கான நடைமுறைகளை மத்திய அரசு ஆரம்பித்த நிலையில், ஏர் இந்தியாவை வாங்குவதற்காக விருப்பம் தெரிவிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் தொகைகளைக் குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அஜய் சிங் தனது நிறுவனம் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஏர் இந்தியாவை வாங்க மேலும் சில நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1932இல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் தொடங்கியது. ஆனால் 1953இல் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு அரசு வசம் சென்றது. தற்போது 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியாவை தன் வசப்படுத்தும் முயற்சியில் டாடா களமிறங்கியுள்ளது.

மற்ற செய்திகள்
