மேடையில் 'கண்ணீர்' விட்டு 'அழுத' பேடிஎம் ஓனர்...! 'மொதல்ல நார்மலா தான் பேச தொடங்கினாரு, திடீர்னு...' - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம் தான்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்முன்னணி நிதி சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் டெல்லியில் நடைபெற்ற பங்குசந்தை கூட்டத்தில் அழுத சம்பவம் வைரலாகியுள்ளது.

டிஜிட்டல் நிதி சேவையில் முன்னணி நிறுவனமாக திகழும் பேடிஎம் நிறுவனம் ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு முக்கிய அங்கமாக விளங்கியது. குறைந்த நாட்களில் பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வந்தது.
இந்நிலையில், பேடிஎம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பேடிஎம் செயலியை தொடங்கியவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா புது புது நிதி சேர்ந்த சேவைகளை வழங்கி வந்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 8-ம் தேதி பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதன் பங்கு விவரத்தை வெளியிட்டது. பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் திரட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பேடிஎம் நிறுவனத்தின் பங்கு வெளியிடப்பட்டு கடந்த நவம்பர் 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று அதன் பங்கு சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்டன.
பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பேடிஎம் விலை தொடக்கத்திலேயே சரிவாக தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தையில் 1955 ரூபாயாக தொடங்கி பேடிஎம் நிறுவனத்தின் பங்கு சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 1806.65 ரூபாயாக காணப்பட்டது. இது தேசிய பங்குசந்தையில் இந்த பங்குகள் நிர்ணயவிலையை விடவும் 15.97 சதவீதம் சரிவினைக் கண்டது. அதன் பின்பும அதிகபட்சமாக 20 சதவீதம் வரை பங்குகள் சரிந்தன.
இதன் காரணமாக பேடிஎம் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
பங்குசந்தை முடிவடைந்த பின் மும்பை பங்குச்சந்தை கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேடிஎம் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கலந்து கொண்டு பேசத் தொடங்கினார்.
முதலில் சாதாரணமாக பேச தொடங்கிய சர்மா சிறிது நேரத்தில் கண்கலங்க ஆரம்பித்தார். கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் தனது கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டே சில நிமிடம் பேசி முடித்தார்.

மற்ற செய்திகள்
