VIDEO: 'கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து PAYTM ஆப் நீக்கம்...' 'வாடிக்கையாளர்களின் WALLET-ல உள்ள பணம் குறித்து...' - ட்விட்டரில் PAYTM நிறுவனம் விளக்கம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிதிமீறல் புகார் வந்ததன் காரணமாக Paytm செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகில் முக்கிய பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்றாக Paytm செயலி இயங்கி வருகிறது. இந்தியாவின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த Paytm செயலிக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் விதிமுறை மீறல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கூகுள் Paytm பயன்பாட்டை பிளே ஸ்டோரிலிருந்து எடுத்துள்ளது, ஆனாலும் Paytm செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
இந்த தடை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள Paytm நிறுவனம், தங்களின் Paytm செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே புதிதாக பதிவிறக்கமோ அல்லது அப்டேட்டோ செய்ய முடியாது என பதிவிட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும். வாடிக்கையாளர்களின் பணம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது எனவும், மேலும் paytm செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
