'உஷார்! PAYTM பயனாளரா?’... ‘அப்போ இந்த ஆப்ஸ்-லாம்’... ‘டவுன்லோடு பண்ணாதீங்க’!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Aug 19, 2019 08:59 PM

பே டிம் (Paytm) பயனாளர்கள் தங்களது வங்கிக்கணக்கை ஆன்லைன் தளங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க சில ஆப்ஸ்-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Paytm account holder Alert, don\'t download these Remote Apps

பே டிம் (Paytm) பயனாளர்கள் கேஒய்சி (KYC) விவரங்களை அப்டேட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கேஒய்சி (KYC) அப்டேட் செய்யும்போது சில போலி செயலிகளை நீங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்தால், ஆன்லைன் வங்கி மோசடியாளர்களின் கையில் சிக்கும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலி செயலிகள் மூலம் ஆன்லைன் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மோசடியாளர்களின் கையில் சிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனி டெஸ்க் (Any Desk), கியுக் போர்ட் (Quicks Port) போன்ற செயலிகளை பே டிம் (Paytm) பயனாளர்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், யுபிஐ (UPI) பேமன்ட் செயலிகள் அனைத்துக்குமே இந்த எச்சரிக்கை பொருந்தும்.

சமீப காலமாக பே டிம் (Paytm) பயனாளர்களையே பல மோசடிக் கும்பல்களும் மொபைல் ஹேக்கிங் மூலம் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், வங்கி கணக்கு சம்பந்தமான ஃபோன் அழைப்புகள் வரும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #PAYTM #ACOUNTHOLDER