கொரோனாவால பல 'கோடி' இந்தியர்கள் 'வேலை'யும் போச்சு,,.. 'இப்போ' இந்த விஷயத்துலயும் 'ஆப்பு' வெச்சிருச்சா??,,.. அதிர்ச்சி தரும் சர்வே 'ரிப்போர்ட்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் சராசரி சம்பள உயர்வின் சதவீதம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3.6 சதவீதம் குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக டெலோயிட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த சர்வே நடத்தப்பட்ட நிறுவனங்களில் 40 சதவீத நிறுவனங்கள் மட்டும் இந்தாண்டு சம்பள உயர்வு அறிவித்துள்ளது. 33 சதவீத நிறுவனங்கள் இந்தாண்டு சம்பள உயர்வு அறிவிக்கவில்லை. மீதமுள்ள நிறுவனங்கள், இந்தாண்டு சம்பள உயர்வு செய்வது குறித்து எந்த முடிவுகளும் எடுக்கவில்லை.
இதில், சம்பள உயர்வு அறிவித்த நிறுவனங்களில் சராசரியாக 7.5 சதவீதம் உயர்வு அளித்திருந்த நிலையில், சில நிறுவனங்கள் இந்தாண்டு தொடக்கத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சம்பள உயர்வு அளித்திருந்தது. ஆனால், ஊரடங்கிற்கு பிறகு அதன் சதவீதமும் குறைந்துள்ளது. 'கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சம்பள உயர்வு குறைந்து வருகிறது. இதற்கு காரணம், பொருளாதாரத்தின் போக்கு மற்றும் உயரும் விளிம்பு அழுத்தங்கள் ஆகும். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரத்தை மந்த நிலைக்கு இழுத்து செல்வதால் நிறுவனங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது. மந்த நிலையின் காரணமாக நிறுவனங்கள் பணத்தினை சேமித்து வைக்க வழி செய்கின்றன' என டெலோயிட் நிறுவனத்தின் பார்ட்னர் ஆனந்தோருப் கோஷ் தெரிவித்துள்ளார்.
அதே போல எந்த நிறுவனங்களும், இரட்டை இலக்க சம்பள உயர்வில் ஈடுபடவில்லை என்பதும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றது. கொரோனா தொற்று காரணமாக அறிவியல் சார்ந்த நிறுவனங்கள் சராசரியாக அதிகம் சம்பள உயர்வை கண்டாலும், உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் சம்பள உயர்வு சராசரி மிகவும் மோசமாக அமைந்துள்ளது . ரியல் எஸ்டேட், வாகனத் துறை, சில்லறைத் துறை நிறுவனங்களும் சம்பள உயர்வு விகிதத்தில் இந்தாண்டு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல கோடி இந்தியர்கள் வேலையிழந்து திண்டாடி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த சம்பள உயர்வு குறித்த சர்வே முடிவுகளும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இனி வரும் நாட்களிலும், இதே நிலைமை தொடரும் அபாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
