Valimai BNS

மார்ச் மாசத்துக்கு முன்னாடி வீடு வாங்கப் போறீங்களா..? அப்போ இந்த சூப்பர் சலுகையை யூஸ் பண்ணிக்கோங்க.. முழு விவரம்..

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Feb 25, 2022 10:54 PM

மார்ச் மாதத்திற்கு முன்பு வீடு வாங்குபவர்களுக்கு அசத்தல் வரிச்சலுகை ஒன்று காத்துள்ளது.

Home Loan Tax benefit-Income Tax benefit on House Loan

வருமான வரிச் சட்டப் பிரிவு 80EEA கீழ், மலிவு விலை வீடுகளுக்கான கூடுதல் வரிச் சலுகை பலன்கள் உள்ளன. மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக வீடு வாங்குபவர்கள் இதை நினைவில் கொள்ளுங்கள். 2022-23 பட்ஜெட்டில் இந்த வரிச் சலுகைக்கு நீட்டிப்பு வழங்கப்படவில்லை. அதனால் 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது உங்களுக்கு கிடைக்காது.

சட்டப் பிரிவு 80EEA கீழ், வருமான வரிச் சட்டப்பிரிவு 24-ன் படி நீங்கள் ரூ.2 லட்சம் வரி விலக்கு பெறுவதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக நீங்கள் ரூ.1.5 வரை வரிச் சலுகை பெற முடியும். மலிவு விலை வீடு வாங்குவதற்கான கடன் மீது நீங்கள் செலுத்தும் வட்டியில் இந்த சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது வருமான வரி சட்டப் பிரிவுகள் 80EEA மற்றும் 24 ஆகியவற்றை பயன்படுத்தி, தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடியும்.

தற்போது, பிரிவு 80EEA கீழ் நீங்கள் வரிச் சலுகை பெற வேண்டும் என்றால், பின்வரும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த கடன் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் குடியிருப்பு வீட்டுக்கான பத்திரப் பதிவு மதிப்பு என்பது ரூ.45 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது. கடன் பெறும் நாளில், தனிநபரின் பெயரில் வேறெந்த வீடுகளும் இருக்கக் கூடாது

இதுகுறித்து கூறிய வரி ஆலோசகர்கள், ‘பிரிவு 80EEA கீழ் நீங்கள் வரிச் சலுகை பெற வேண்டும் என்றால் உங்களுக்கான வீட்டுக் கடன் மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டால், அடுத்து வரும் நிதியாண்டுகளில் உங்கள் கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரையிலும் நீங்கள் வரிச் சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

அதேசமயம், குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு மட்டும்தான் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், தனிநபர்கள் மட்டுமே இந்தச் சலுகைக்கு உரிமை கோர முடியும். கூட்டு குடும்ப வருமானத்தின் கீழ் இந்தச் சலுகையை பெற முடியாது. ஒரு நிதியாண்டில் தனிநபர் செலுத்தியுள்ள மொத்த வரி ரூ.2 லட்சத்தை தாண்டுகிறது என்றால், அவர் பிரிவு 80EEA கீழ் வரிச் சலுகை கோர முடியும்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : #INCOME TAX #HOME LOAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Home Loan Tax benefit-Income Tax benefit on House Loan | Business News.