ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ‘முதலிடம்’ யார் தெரியுமா..? இந்த தடவை ‘பெரிய’ ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னுக்குத்தள்ளி கௌதம் அதானி முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடைசியாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும் இருந்தனர். ஆனால் இந்த குறைந்த காலத்தில் அம்பானியை விட அதானியின் வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.
தற்போது ப்ளூம்பெர்க் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் முகேஷ் அம்பானி 90 பில்லியன் டாலர், கௌதம் அதானி 88.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்தாலும், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டை கணக்கிடும்போது முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
சமீபத்தில் சவுதி ஆராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை என தெரிவித்தது. இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்-ன் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் பங்குகளை சுமார் 1.4 சதவீதம் சரிந்து 2350.90 ரூபாய் அளவில் தொட்டது.
ஆனால் கவுதம் அதானியின் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அதானி குடும்பத்தின் மொத்த சந்தை மதிப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பை விடவும் அதிகரித்துள்ளது. அதனால் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.