www.garudabazaar.com

Breaking: fans-க்கு செம்ம treat.. ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையில் பாடியுள்ள முன்னணி இசையமைப்பாளர் இவரா?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடிக்கும் அடுத்த படம் 'அன்பறிவு'.

Yuvan sung in Anbarivu First time in Hip hop Thamizha Music

சத்யஜோதி பிலிஸ் நிறுவனம் சார்பில், T.G.தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நடிகர்கள் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

Yuvan sung in Anbarivu First time in Hip hop Thamizha Music

வரும் ஜனவரி 7-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் ஆதி எழுதியுள்ளார்.

இந்த படத்தில் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகறிந்த புகழ்பெற்ற பாடகர் முத்துசிற்பி பாடியிருந்ததை குறிப்பிட்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி, தகவலை பகிர்ந்திருந்தார். முத்துச்சிற்பி, நாடகங்களில் பாடிவந்த நிலையில், அவருக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு அங்கீகாரத்தை தந்தது. அதன் பின் முத்துச் சிற்பி பாடும் படங்களுள் அன்பறிவு முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு நட்சத்திர இசையமைப்பாளர் பாடுவது என்பது அரிதான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக திரைத்துறையில் பார்க்கப்படும். அந்த வகையில் ஹிப் ஹாப் தமிழா இசையில், யுவன் ஷங்கர் ராஜா ஒரு காதல் பாடலை பாடியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்த பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், யுவன் இசையில் ஹிப் ஹாப் தமிழா பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் குறிப்பிட்ட இந்த 2 இசையமைப்பாளர்களின் ரசிகர்களுமே கொண்டாடப் போவது உறுதி. இதனிடையே இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் சிம்பு நடிப்பிலான மாநாடு திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இதேபோல், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் வலிமை திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் தொடக்கப் பாடலான நாங்க வேற மாரி பாடல் மற்றும் அம்மா செண்டிமெண்ட் பாடலான அம்மா பாடல் ஆகியவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan sung in Anbarivu First time in Hip hop Thamizha Music

People looking for online information on Anbarivu, Hip Hop Tamizha Adhi, Hip Hop Tamizha Adhi, Muthusirpi, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.