www.garudabazaar.com

"இந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதமா இருந்தேன்!".. Writer பட விழாவில் பா.ரஞ்சித் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Pa Ranjith speech over his poltical idea witer movie launch

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல்,  மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பா .ரஞ்சித் பேசும்போது, “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னை சந்தித்தார். காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார். பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை.

அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க மிகவும் ஆசை.

பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்த பட்சம் 5 படங்கள் தயாரிக்கலாம் என பேசி முடிவெடுத்தோம். கதை தேர்வில் நான் பிடிவாதமாக இருந்தேன். கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும். தவறான அரசியல் பேசக்கூடாது. எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மக்களுக்கு செல்லும் படம் சரியான படமாக இருக்கவேண்டும் என நினைத்தேன்.

ரைட்டர் படத்தை தயாரிக்க, நான் முன்வந்ததற்கான காரணம் இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் இருந்தது தான். இப்படம் சிறப்பாக இருக்கும் என கதை படிக்கும்போதே எனக்கு தோன்றியது. படப்பிடிப்பின்போது இப்படம் டெக்னிக்கலாகவும் படம் அருமையாக வரும் என நினைத்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்திலும் அவரது பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது.

இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் சமுத்திரக்கனி அண்ணனை சந்திக்கலாம் என்று கூறினேன். நான் எதுவும் சொல்லாமலேயே கதையை படித்துவிட்டு கதை சூப்பர். கண்டிப்பாக பண்ணலாம் என சமுத்திரக்கனி தெரிவித்தார். கண்டிப்பாக அவர் தங்கராஜ் ஆக வாழ்ந்துள்ளார் என்று சொல்லவேண்டும். மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இப்படத்தில் அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.” என கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith speech over his poltical idea witer movie launch

People looking for online information on Dileepan, Franklin Jacob, Govind Vasantha, Neelam productions, P Samuthirakani, Pa Ranjith, Writer will find this news story useful.