www.garudabazaar.com

'வலிமை' 3rd single.. சைலண்டா இன்று வெளியாகுதா? நடந்தா வேற மாரி... படு குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படத்தின் அடுத்த சிங்கிள் இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் அப்டேட் வருமா என்று காத்துகொண்டு இருக்கின்றனர்.

will Ajith valimai movie 3rd single release today?

அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம்தான் வலிமை. இப்படத்தை H.வினோத் இயக்க,  போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனை பார்த்த படக்குழுவினரும் பல அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தனர்.

முன்னதாக, வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில்  இப்படத்தின் இன்னொரு பாடலான அம்மா பாடல் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அஜித்தின் கேரக்டர் குழந்தையாக இருப்பது முதல் வளர்ந்து தன் அம்மாவை பார்த்துக்கொள்வது வரை அனிமேஷனாக இந்த பாடல் உருவாக்கபட்டுள்ளது.

will Ajith valimai movie 3rd single release today?

பாடலை உருவாக்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த இரண்டு பாடல்களையும் இயக்குனரான விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். இதனால் அவருக்கு பல பாராட்டுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பற்றிய எந்த செய்தி வெளிவந்தாலும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதில் படத்தின் பூஜை முதல் கடைசி பிட் ஆக்ஷன் காட்சிகள் வரை எப்படி படமாக்கப்பட்டன என்பவை இடம் பெற்றுள்ளன.குறிப்பாக, படத்தின் ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு ரிஸ்க்குடன் காட்சியாக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளியிட்டனர்.

அஜித் மற்றும் அனைத்து ஸ்டண்ட் கலைஞர்களும் எப்படி ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்தனர் என்பதை அருமையாக காட்டியிருந்தனர். அண்மையில் இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. ஸ்டண்ட் செய்யும் வீடியோவில் அஜித் கீழே விழுவதை பார்த்த அஜித் ரசிகர்கள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிப்பதை கொண்டாடி வந்தனர். இந்த காட்சிகள் மூலம் ரசிகர்களிடையே இப்படத்தின் கதையமைப்பை பற்றிய பல கேள்விகள் எழுந்து  வருகின்றது. அதிலும் குறிப்பாக வலிமை படம் ரோட் சேஃப்டி போன்ற பல விஷயங்களை கதையின் மையமாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசத்தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில் திடீரென்று இப்படத்தின் 3rd single இன்று வெளிவரும் என்று செய்திகள் இணையத்தில் பரவ, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

will Ajith valimai movie 3rd single release today?

அதன்படி, வலிமை படத்தின் 3- சிங்கிள் இன்று வெளிவருமா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.  ஏற்கனவே #ValimaiMakingVideo #valimaiupdate போன்ற பல ஹேஷ்டாக் ட்ரெண்டாகி இருக்க, இப்போது #valimai3rdsingle என்ற ஹேஷ்டாக் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது இப்படத்தை பற்றி பல எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் 3rd சிங்கிள்  வெளிவந்தால் கண்டிப்பாக  கொண்டாட்டத்தில் மூழ்கி விடுவார்கள் என்பது நிச்சயம் ! 

தொடர்புடைய இணைப்புகள்

will Ajith valimai movie 3rd single release today?

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Valimai single, Latest tamil news, Tamil cinema news, Valimai, Valimai 3rd Single, Valimai movie latest update, Valimai3rdsingle, ValimaiThirdSingleRelease, ValimaiUpdate will find this news story useful.