www.garudabazaar.com

போனிகபூர் பகிர்ந்த அஜித் - நிரவ் ஷா இருக்கும் 'வலிமை' படத்தின் செம COOL - ஆன BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Boney Kapoor Shared BTS Image of Valimai Movie

NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.  இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

Boney Kapoor Shared BTS Image of Valimai Movie

 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. வலிமை படத்தின் மிரட்டலான உருவாக்க வீடியோவும் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. 

Boney Kapoor Shared BTS Image of Valimai Movie

இந்நிலையில் தயாரிப்பாளர் போனிகபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படத்தின் BTS புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா அஜித்துடன் போனிகபூர் கலந்தாலோசிப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Boney Kapoor Shared BTS Image of Valimai Movie

People looking for online information on Ajith, Ajith Kumar, Ajithkumar, AK, அஜித்குமார், நிரவ் ஷா, மேக்கிங் வீடியோ, வலிமை, வலிமை ரிலீஸ், வினோத், Boney kapoor, H Vinoth, Valimai, Valimai making video, Valimai Overseas Rights, Valimai update, Yuvan Shankar Raja will find this news story useful.