www.garudabazaar.com

SUN PICTURES தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷீட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செங்கல்பட்டு: சன் பிக்சர்ஸ் - விஜய் சேதுபதி - பொன்ராம் இணைந்த புதிய பட ஷூட்டிங் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது.

Vjs 46 Vijay sethupathy Ponram Sun Pictures movie breaking Update

தனது மனைவியான பிரபல நடிகைக்கு நடு ரோட்டில் முத்தம் கொடுத்த நடிகர்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகில் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. கடைசியாக கடைசி விவசாயி படம் வெளியானது. விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.

Vjs 46 Vijay sethupathy Ponram Sun Pictures movie breaking Update

இதில் திண்டுக்கல் மாவட்ட ஐபிஎஸ் ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் பொன்ராம் தனது முதல் படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் செங்கல்ப்பட்டில் நிறைவடைந்து விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vjs 46 Vijay sethupathy Ponram Sun Pictures movie breaking Update

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட், தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய அட்லி - ப்ரியா! இந்த இடத்துக்கா போயிருக்காங்க? WOW

தொடர்புடைய இணைப்புகள்

Vjs 46 Vijay sethupathy Ponram Sun Pictures movie breaking Update

People looking for online information on அனுக்ரீத்தி வாஸ், பொன்ராம், விஜய் சேதுபதி, Ponram, Sun pictures, Vijay Sethupathy, VJS, VJS 46 will find this news story useful.