www.garudabazaar.com

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம்; நடிகர் விஜய் சேதுபதியின் அசத்தலான FIRST LOOK POSTER! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Ranjankudi Anbarasu Murugesa B'oopathy Ohoondhiran VJS KRK FL

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது.

Ranjankudi Anbarasu Murugesa B'oopathy Ohoondhiran VJS KRK FL

பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சில நாட்களுக்கு முன் நிறைவுபெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Ranjankudi Anbarasu Murugesa B'oopathy Ohoondhiran VJS KRK FL

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று (15.11.2021) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. 

Ranjankudi Anbarasu Murugesa B'oopathy Ohoondhiran VJS KRK FL

இந்த படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும், சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த படம் வருகிற டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ranjankudi Anbarasu Murugesa B'oopathy Ohoondhiran VJS KRK FL

People looking for online information on Anirudh, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.