Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

ரசிகர்களுடன் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த 'வலிமை' இயக்குனர் H வினோத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசி விவசாயி படத்தை வலிமை இயக்குனர் எச்.வினோத் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டுகளித்துள்ளார்.

Valimai Director H Vinoth Watched VJS Kadaisi Vivasayi

காக்கா முட்டை  திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மணிகண்டன். இந்த படத்திற்கு பிறகு, வித்தார்த் நடிப்பில்  குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கினார். இவரது அனைத்து படங்களும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பின் இயக்குனர் மணிகண்டன் கடைசி விவசாயி படத்தை தயாரித்து இயக்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை இயக்குனர் மணிகண்டனே செய்கிறார். முதலில் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார், சில காரணங்களால் சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகிபாபு, நல்லாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படம் வரும் பிப்ரவரி 11 அன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேனி திரையரங்கில் எச்.வினோத் கடைசி விவசாயி படத்தை பார்த்துள்ளார். வலிமை படத்தின் மின்னணு போஸ்டருடன் எடுத்த புகைப்படத்தையும் திரையரங்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

Valimai Director H Vinoth Watched VJS Kadaisi Vivasayi

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இதில் தமிழ் மொழி டிரெய்லர் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டினர்.

Valimai Director H Vinoth Watched VJS Kadaisi Vivasayi

நேற்று முன் தினம் இந்தி டிரெய்லரை இந்தி சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கனும், தெலுங்கு டிரெய்லரை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும், கன்னட டிரெய்லரை கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Valimai Director H Vinoth Watched VJS Kadaisi Vivasayi

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Director H Vinoth Watched VJS Kadaisi Vivasayi

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Kadaisi Vivasayi, Valimai will find this news story useful.