சித்ரா நடித்த 'கால்ஸ்' ட்ரெய்லர் வெளியானது. - 'அப்படியே நிஜ வாழ்க்கையோடு... ரசிகர்கள் எமோஷனல்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

சித்ரா நடித்த கால்ஸ் பட ட்ரெய்லர் | VJ Chithra's calls movie trailer released fans turns emotional

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். 

சித்ரா நடித்த கால்ஸ் பட ட்ரெய்லர் | VJ Chithra's calls movie trailer released fans turns emotional

இதனிடையே சித்ரா கடைசியாக கால்ஸ் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சபரீஷ் இயக்கியுள்ளார். இதில் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சித்ரா நடித்த கால்ஸ் பட ட்ரெய்லர் | VJ Chithra's calls movie trailer released fans turns emotional

இந்நிலையில் தற்போது கால்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மிரட்டலான த்ரில்லர் பாணியில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரை கண்ட ரசிகர்கள், இது அப்படியே சித்ராவின் நிஜ வாழ்க்கையோடு ஒத்து போவது போல இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். 

சித்ரா நடித்த கால்ஸ் பட ட்ரெய்லர் | VJ Chithra's calls movie trailer released fans turns emotional

மேலும் சித்ராவின் ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை கண்டு எமோஷனல் கமன்ட்ஸையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விரைவில் இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சித்ரா நடித்த 'கால்ஸ்' ட்ரெய்லர் வெளியானது. - 'அப்படியே நிஜ வாழ்க்கையோடு... ரசிகர்கள் எமோஷனல்' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சித்ரா நடித்த கால்ஸ் பட ட்ரெய்லர் | VJ Chithra's calls movie trailer released fans turns emotional

People looking for online information on Calls, Pandian Stores Chithra, Vj chithra will find this news story useful.