'தமிழ் பிக்பாஸ் குரல் இவர்தான்'... அடித்து சொல்லும் ரசிகர்கள்... செம வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி  முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு.

is this actor owns tamil biggboss voice தமிழ் பிக்பாஸ் குரல் இவர்தானா?

இந்நிலையில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்கள் என்று சமூக வலைதளங்களில் பலரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் யாரும் அதை ஒப்புக் கொண்டதும் இல்லை, விஜய் டிவியும் இதுவரை அவரை வெளிப்படுத்தியதும் இல்லை. ஏனெனில் பிக்பாஸ் யார் என்று தெரிந்து விட்டால்  போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் மீது இருக்கிற சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதே காரணமாக இருக்கலாம். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பாலிவுட் நடிகர் சச்சிதானந்தம் என்கிற சாஷோ பேசும்  வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே சிலர் இவர் தான் பிக்பாஸ் என்று சந்தேகம் கூட தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பிக்பாஸின் குரலை அச்சு அசல் அப்படியே ஒத்து இருக்கும் அவரது இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவர்தான் நிச்சயம்  தமிழ் பிக்பாஸ் என்று கமென்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். எனினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

'தமிழ் பிக்பாஸ் குரல் இவர்தான்'... அடித்து சொல்லும் ரசிகர்கள்... செம வைரலாகும் வீடியோ..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

is this actor owns tamil biggboss voice தமிழ் பிக்பாஸ் குரல் இவர்தானா?

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.