www.garudabazaar.com

சித்ராவை போன்ற தோற்றம்... லேட்டஸ்ட் போட்டோஷூட் செம வைரல்.!! முல்லை கேரக்டரில் நடிக்கிறாரா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவை போலவே ஒருவர் போட்டோஷூட் நடத்தியுள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

இதனிடையே கடந்த 9-ஆம் தேதி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரது மரணம் தொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

இந்நிலையில் நடிகை சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார்கள் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இவர் தான் முல்லை கேரக்டரில் நடிப்பார் என சில நடிகைகள் குறித்தும் கிசுகிசுக்கப்பட்டது. 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

இது ஒருபுறமிருக்க, தொலைக்காட்சி பிரபலமான கீர்த்தனா தினகர் என்பவர் சித்ராவின் முல்லை கெட்டப்பில் புதிதாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் செல்லும் இடமெல்லாம் என்னை சித்ரா போல் இருப்பதாக சொல்வார்கள். ஆரம்பத்தில் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

ஆனால் இப்போது அப்படி சொல்லும் போது, என்னை பார்த்தாவது யாரோ சந்தோஷப்படுகிறார்கள் என்று நிறைவாக இருக்கிறது. சித்ரா மறைந்ததில் இருந்து, எனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமை அப்ரோச் செய்து ஆடிஷன் கொடுக்க சொன்னார்கள். 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. குழுவினரும் இந்நேரம் அவருக்கு பதிலாக வேறு ஒரு சரியான தேர்வை முடிவெடுத்திருப்பார்கள். சித்ரா மீது எங்களுக்கு இருக்கும் அன்பையும் மரியாதையையும் காட்டவே இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளோம். 

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

அவரை விரும்புவர்கள், இந்த புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வார்கள்  என்று நம்புகிறோம்'' என அவர் பதிவிட்டுள்ளார். கீர்த்தனா வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

சித்ரா போல் போட்டோ எடுத்த நடிகை | Popular serial actress recent photoshoot resembling pandian stores chithra

People looking for online information on Chithra, Keerthana Dinakar, Pandian Stores Chithra will find this news story useful.