IndParty
www.garudabazaar.com

நடிகை சித்ரா மரணம்... ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?... வெளியானது போலீஸ் தரப்பு அறிக்கை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

vj chithra death police report நடிகை சித்ரா மரணம்

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் போலீஸ் தரப்பு அறிக்கையில் "கடந்த 4ஆம் தேதியில் இருந்து இவிபி பிலிம் சிட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் நடந்து வந்ததால். அவர் அருகில் இருந்த ஒரு தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்துள்ளார். மேலும் நேற்றைய தினம் இரண்டரை மணிக்கு ஷுட்டிங் முடிந்த காரணத்தினால், அவர் ஓட்டல் அறைக்கு சென்று ஹேமந்திடம் "சற்று நேரம் வெளியே இருங்கள். நான் குளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். அவரும் வெளியேற, கதவை உள்பக்கம் பூட்டிய அவர் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. உடனே ஹேமந்த் ஓட்டல் ஊழியரை அழைத்து வந்து கதவை வேறு சாவியுடன் திறந்து உள்ளே சென்ற போதுதான் அவர் தூக்கில் தொங்கிய சம்பவம் தெரிந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை சித்ரா மரணம்... ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?... வெளியானது போலீஸ் தரப்பு அறிக்கை...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vj chithra death police report நடிகை சித்ரா மரணம்

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.