IndParty
www.garudabazaar.com

Video: இந்த புத்திசாலித்தனத்தை 'டாஸ்க்ல' காட்ட சொல்லுங்க... கலாய்த்த பிக்பாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று இயந்திர மனிதா என்ற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்க அர்ச்சனா அணி தலைமையில் ரம்யா, ஷிவானி, கேப்ரியலா, ரமேஷ் மற்றும் சோம் ஆகியோர் ரோபோட்களாக மாறினர். பாலாஜி தலைமையில் ரியோ, நிஷா, ஆரி, அனிதா, ஆஜீத் ஆகியோர் மனிதர்களாக மாறினர். இயந்திரங்களுக்கு இரண்டு ஹார்ட்டுகள் இருக்கும். இதை எமோஷனல் பயன்படுத்தி மனிதர்கள் அபகரிக்க வேண்டும் என்பதே இதன் விதி.

Unseen Video: Bigg Boss told All the best to Rio Raj

இந்த நிலையில் Unseen வீடியோ ஒன்றில் ரியோ பிக்பாஸிடம் சந்தேகம் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சந்தேகம் ஒன்றை ரியோ  கேட்க இந்த கேள்வியை யார் கேட்டது? என பிக்பாஸ் கேட்கிறார். பதிலுக்கு ரியோ, ரம்யா கேட்டதாக கூற இந்த புத்திசாலித்தனத்தை டாஸ்க்ல காட்ட சொல்லுங்க. டாஸ்க் சுவாரசியமா இருக்கணும் என பிக்பாஸ் கூறுகிறார்.

இதையடுத்து ரியோ மேலும் ஒரு கேள்வியை கேட்க நான் போன கேள்விக்கு என்ன பதில் சொன்னேன் ரியோ என பிக்பாஸ் திருப்பி கேட்கிறார். பதிலுக்கு ரியோ புரிஞ்சுருச்சு பிக்பாஸ் ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டா நான் கெளம்பிருவேன் என கேட்கிறார். இதற்கு பிக்பாஸ் கிண்டலாக ஆல் தி பெஸ்ட் என சொல்வது போல வீடியோ முடிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் பிக்பாஸ் பேசுவாரா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Unseen Video: Bigg Boss told All the best to Rio Raj

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.