பிரபல நடிகரின் டீஸர் விரைவில் வெளியாகிறது ! work mode-க்கு தயாராகும் படக்குழுவினர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வரும் படம் சக்ரா.  இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  

vishal's upcoming film chakra teaser to be released soon

Shooting பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பில் சில வேலைகள் முடிக்க வேண்டி இருந்தது. அச்சமயத்தில், கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஷூட்டிங் தள்ளிப் போடப்பட்டது. லாக்டவுன் முடிந்ததும் பேட்ச் அப் வேலைகளை முடித்தபின், விரைவில் இப்படம் வெள்ளித்திரை காணவிருக்கிறது.

இந்நிலையில் தற்போது 'சக்ரா' படத்தின் டீஸர் தயாராகி வருகிறது.  விஷால் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vishal's upcoming film chakra teaser to be released soon

People looking for online information on Chakra, Chakra teaser, Lockdown, Vishal will find this news story useful.