Viruman Logo Top
www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் கோப்ரா.. ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த பட நிறுவனம்! தரமான அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vikram A R Rahman Cobra Movie Official Merchandise

Also Read | மான்ஹாட்டன் தீவில் பூஜா ஹெக்டே.. அட.. ஹேர் ஸ்டைல் பண்ணது இவங்கதானா? செம ஃபோட்டோஸ்

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும்  "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

Vikram A R Rahman Cobra Movie Official Merchandise

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தயாரிப்பு நிறுவனம் பிரபல Fully Filmy நிறுவனத்துடன் இணைந்து படத்தின் கிராபிக்ஸ் போஸ்டர் & விக்ரம் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் முகம் பதித்த உடைகளை நாளை மாலை 6 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளனர். இதை பிரத்யேக அனிமேஷன் வீடியோவோடு படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vikram A R Rahman Cobra Movie Official Merchandise

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vikram A R Rahman Cobra Movie Official Merchandise

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | 33 வகை உணவுகளுடன் பாகுபலி மீல்ஸ்.. வேற மாரி சாப்பிட்ட விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram A R Rahman Cobra Movie Official Merchandise

People looking for online information on AR Rahman, Cobra, Vikram, Vikram Cobra movie updates will find this news story useful.