www.garudabazaar.com

விக்ரம் பிரபு - ஸ்ரீ திவ்யா நடிக்கும் புதிய ACTION திரைப்படம்.. வரவேற்பை பெறும் மாஸ் FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘ரெய்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

first look poster of Vikram Prabhu Sri dhivya starrer Raid

Also Read | "நீங்க உங்க Ex கூட.." கரண் ஜோஹர் கேட்ட பரபரப்பு கேள்வி.. கொஞ்சம் கூட அசராம ஜான்வி சொன்ன பதில்

நடிகர் விக்ரம் பிரபு தேர்ந்தெடுக்கும் தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்கள்,  திரைப்பயணத்தில் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன.

அவரது முந்தைய படமான டாணாகாரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அடுத்ததாக வரவிருக்கும் ‘ரெய்டு’ திரைப்படத்தின் முதல் பார்வை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பிரபுவின் அட்டகாசமான தோற்றம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் அசத்தலான தலைப்பு,  படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

first look poster of Vikram Prabhu Sri dhivya starrer Raid

ரெய்டு திரைப்படத்தை கார்த்திக் இயக்குகிறார்.  S.K.  கனிஷ்க், GK (எ) G.மணிகண்டன் தயாரிக்கிறார்கள்.

முதன்மை  கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக  வெள்ளைக்கார துரை படத்தில் விக்ரம் பிரபு & ஸ்ரீ திவ்யா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் முத்தையா இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

first look poster of Vikram Prabhu Sri dhivya starrer Raid

Also Read | கொசுக்கடியில் சினிமா ஷூட்டிங்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து புதிய PAN INDIA படத்தின் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

first look poster of Vikram Prabhu Sri dhivya starrer Raid

People looking for online information on Raid, Raid Movie First Look Poster, Raid Movie Updates, Sri dhivya, Vikram Prabhu, Vikram Prabhu Raid Movie will find this news story useful.