www.garudabazaar.com

VIDEO: Once Upon a Time பாடலுடன் வெளியான 'விக்ரம்' படத்தின் சரவெடியான சண்டைக்காட்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Vikram Once Upon a Time Video Song Released

Also Read | சூஃபி கவிஞர் ரூமியின் கவிதையுடன் மாலத்தீவு கடற்கரையில் வேதிகா பிகினி போட்டோஷூட்!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

Vikram Once Upon a Time Video Song Released

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

Vikram Once Upon a Time Video Song Released

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

Vikram Once Upon a Time Video Song Released

இந்நிலையில், விக்ரம் படத்தின் Once Upon a Time பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய துப்பாக்கி சுடும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்கு இந்த பாடல் பின்னணியில் ஒலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒடிடியில் வெளியான பின்னும் இந்த  படம் வெற்றிகரமாக இன்னும் நகர்ப்புறத்தில் உள்ள சில திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

Also Read | செஸ் விளையாடும் ரஜினிகாந்த்.. மாஸான Throwback போட்டோவை வெளியிட்டு வீரர்களுக்கு வாழ்த்து!

VIDEO: ONCE UPON A TIME பாடலுடன் வெளியான 'விக்ரம்' படத்தின் சரவெடியான சண்டைக்காட்சி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Once Upon a Time Video Song Released

People looking for online information on Kamal Haasan, Vikram, Vikram Once Upon a Time Video Song will find this news story useful.